Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரைக் கோட்ட ரயில்வே  ஊழியர்களுக்கு விருது

மதுரைக் கோட்ட ரயில்வே  ஊழியர்களுக்கு விருது

மதுரைக் கோட்ட ரயில்வே  ஊழியர்களுக்கு விருது

மதுரைக் கோட்ட ரயில்வே  ஊழியர்களுக்கு விருது

ADDED : அக் 08, 2025 07:11 AM


Google News
மதுரை மதுரை ரயில்வே கோட்டத்தின் 2 அதிகாரிகள் உட்பட 12 ஊழியர்கள், இந்தாண்டுக்கான'ரயில் சேவா புரஸ்கார்' விருது வென்றனர்.

தெற்கு ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு 'விக் ஷித் ரயில் சேவா புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.அதில், கோட்ட சுற்றுச்சூழல், வீட்டு பராமரிப்பு மேலாளர் குண்டேவர் பாதல், இளநிலை பொறியாளர் ஜெயவேல் அரவிந்தன், கணக்கியல் உதவியாளர் காயத்ரி, முதன்மை லோகோ இன்ஸ்பெக்டர் சுரேஷ், வரைபடப் பிரிவு பொறியாளர் கார்த்திகேயன், ரயில் பாதை பராமரிப்பு பொறியாளர்கள் குமார், பால யுகேஷ், ரயில் பெட்டி பராமரிப்பு பொறியாளர் நயினார், ரயில்வே மருத்துவமனை மருந்தாளர் கணேசன், ரயில் இயக்க கட்டுப்பாட்டு அலுவலர் ஜெய கணேஷ், காரைக்குடி உதவி கோட்ட பொறியாளர் விவேகானந்தன், பழநி ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் தாமரைச்செல்வி ஆகியோர் விருதுகளை வென்றனர்.

மதுரை கோட்டம், ஊழியர் நலம், ரயில் நிலைய துாய்மை பராமரிப்பு போன்ற பிரிவுகளில் பகிர்வு சுழற்கேடயங்களை வென்றது.

அலுவல் மொழித்துறையில் தனி சுழற்கேடயம், பயணிகள் குறைகளை களைவதில் 2ம் இடத்திற்கான சுழற்கேடயம் வென்றது. மதுரை கோட்ட ரயில்வே மருத்துவமனை சிறந்த குடும்ப நல மையமாக அங்கீகரிக்கப்பட்டது. கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, கிளை அதிகாரிகளுடன், தெற்கு ரயில்வேபொது மேலாளர் ஆர்.என். சிங்கிடமிருந்து விருதுகளைப் பெற்றார் .





      Our Apps Available On




      Dinamalar

      Follow us