ADDED : டிச 04, 2025 06:24 AM
உசிலம்பட்டி: கருமாத்துார் அருள்ஆனந்தர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாமில் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், விதைப்பந்து துாவும் நிகழ்ச்சி நடந்தது. திட்ட அலுவலர் அபிராமி வரவேற்றார். செயலர் அந்தோணிசாமி, முதல்வர் அன்பரசு துவக்கி வைத்தனர்.
பார்வை பவுண்டேஷன் அமைப்பின் குபேந்திரன் பங்கேற்றார். கல்லுாரியில் இருந்து விழிப்புணர்வு கோஷங்களுடன் ஊர்வலமாக புள்ளநேரி கண்மாய்க்குச் சென்று, பல்வேறு மரம், செடிகளின் விதைப்பந்துகளை மாணவர்கள், வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்கள் இணைந்து துாவினர்.


