/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதில் பி.இ.ஓ.,க்கள் கட்டைய போடுறாங்க... ; தொடக்க கல்வித்துறை மீது கொந்தளிப்பில் ஆசிரியர்கள்ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதில் பி.இ.ஓ.,க்கள் கட்டைய போடுறாங்க... ; தொடக்க கல்வித்துறை மீது கொந்தளிப்பில் ஆசிரியர்கள்
ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதில் பி.இ.ஓ.,க்கள் கட்டைய போடுறாங்க... ; தொடக்க கல்வித்துறை மீது கொந்தளிப்பில் ஆசிரியர்கள்
ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதில் பி.இ.ஓ.,க்கள் கட்டைய போடுறாங்க... ; தொடக்க கல்வித்துறை மீது கொந்தளிப்பில் ஆசிரியர்கள்
ஓய்வூதிய பணப்பலன்களை வழங்குவதில் பி.இ.ஓ.,க்கள் கட்டைய போடுறாங்க... ; தொடக்க கல்வித்துறை மீது கொந்தளிப்பில் ஆசிரியர்கள்
ADDED : ஜூலை 27, 2024 06:24 AM
மதுரை : மதுரை தொடக்க கல்வித்துறையில் ஓய்வுக்கு பின் வழங்க வேண்டிய ஓய்வூதியப் பணபலன்களை உரிய காலத்திற்குள் வழங்காமல் வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்) இழுத்தடிப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவட்டத்தில் மதுரை, திருமங்கலம் என இரண்டு தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்டு 15 கல்வி ஒன்றியங்கள் உள்ளன. 2 மாவட்ட கல்வி அலுவலர்களின் (டி.இ.ஓ.,க்கள்) கீழ் ஒரு ஒன்றியத்திற்கு தலா 2 பி.இ.ஓ.,க்கள் உள்ளனர். ஒரு ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட அரசு, உதவி பெறும் பள்ளிகள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்துறையில் உள்ளனர்.
பெரும்பாலான கல்வி ஒன்றியங்களில் பி.இ.ஓ.,க்கள் - ஆசிரியர் சங்கங்களுக்கு இடையே சுமூக நிலை உள்ள போதும் கள்ளிக்குடி உள்ளிட்ட பல ஒன்றியங்களில் இரு தரப்புக்கும் முட்டல் மோதல் போக்கு நிலவுகிறது. இதனால் பதவி உயர்வு, ஓய்வூதிய பணப் பலன்கள், சம்பளம் வழங்கும் அனுமதி உள்ளிட்ட ஆசிரியர்கள் நலன்சார்ந்த 'பைல்'கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் பி.இ.ஓ., அலுவலகங்களில் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறுகையில், பெரும்பாலான பி.இ.ஓ.,க்கள் ஆசிரியர் நலன்சார்ந்தும், கனிவுடனும் செயல்படுகின்றனர். சில ஒன்றியங்களில் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஓய்வு பெறுவோரிடம் 'பேக்கேஜ்' முறையில் மறைமுகமாக வசூல் செய்கின்றனர். கள்ளிக்குடி ஒன்றியத்தில் மே 31ல் ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியைக்கு இதுவரை பணப் பலன்கள் கிடைக்கவில்லை.
திருமங்கலம் டி.இ.ஓ., கணேசனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் 'நோட்டீஸ்' அளித்த பின் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய அந்த ஆசிரியையின் கருத்துருவில் பி.இ.ஓ., சாந்தி கையெழுத்திட்டார். ஆனால் எப்போது அனுப்புவார் என தெரியவில்லை. பல ஒன்றியங்களில் இதே நிலை நீடிக்கிறது என்றார்.
கள்ளிக்குடி பி.இ.ஓ., சாந்தி கூறுகையில், ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களின் ஒய்வூதிய, பணப்பலன் பரிந்துரை உரிய அலுவலகங்களுக்கு தாமதமின்றி அனுப்பப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை அவரது பணிப்பதிவேட்டை (எஸ்.ஆர்.,) அவரே சில நாட்கள் வைத்திருந்தார். மற்ற அனைத்து 'பைல்'கள் மீதும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பி.இ.ஓ., அலுவலகம் மூலம் அவருக்கு வழங்க வேண்டிய விடுப்பு சம்பளம், சிறப்பு பி.எப்., என அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது. சிலர் வேண்டுமென்று பிரச்னையை கிளப்புகின்றனர். அதில் உண்மை இல்லை என்றார்.