ADDED : அக் 05, 2025 03:38 AM

மேலுார் : அ.வல்லாளபட்டி நாகரம்மாள் இளம நாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு நான்குவளவு அம்பலகாரர்கள் மற்றும் இளைஞர்கள் மாட்டுவண்டி பந்தயம் நடத்தினர்.
பெரிய மாடு பந்தயத்தில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. அ.வல்லாளபட்டி பாரி, நல்லாங்குடி முத்தையா, கொடிமங்கலம் திருப்பதி, புதுசுக்காம்பட்டி அனன்யா மாடுகள் முதல் நான்கு பரிசுகளை வென்றது. சிறிய மாடு பந்தயத்தில் 29 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
முதல் பரிசை அய்யம்பாளையம் கிஷோர், தோடனேரி இருளப்பன், 2ம் பரிசை அ. வல்லாளபட்டி கரடி சாமி, கம்பம் மணி, 3ம் பரிசை மலம்பட்டி காயத்திரி, மாத்துார் சரவணன், 4ம் பரிசை நொண்டி கோவில்பட்டி பிரவீன் சங்கர்,அ. வல்லாளபட்டி உமாபதி மாடுகள் வென்றன.


