Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ' கார்டியோ 2025' கருத்தரங்கம்

' கார்டியோ 2025' கருத்தரங்கம்

' கார்டியோ 2025' கருத்தரங்கம்

' கார்டியோ 2025' கருத்தரங்கம்

ADDED : அக் 13, 2025 03:49 AM


Google News
மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 'கார்டியோ 2025' கருத்தரங்கம் நடந்தது. இதயவியல், அதற்கான சிகிச்சைப் பராமரிப்பை மேம்படுத்தி அனைவருக்கும் எளிதாக கிடைப்பதை நோக்கமாக கொண்டு நடந்தது. தலைவர் டாக்டர் குருசங்கர் கருத்தரங்கை துவங்கி வைத்தார்.

இதயவியல், இதய மார்பறை, உயிர்காக்கும் அவசரநிலை சிகிச்சை நிபுணர்கள், நவீன மருத்துவ முன்னேற்றங்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்து பேசினர். இதயவியல், இதய மார்பறை, ரத்தநாள அறுவை சிகிச்சை, இதயம் சார்ந்த மயக்க மருந்தியல், உயிர்காக்கும் அவசர சிகிச்சையில் முன்னேற்றங்கள் குறித்த விவாதம் நடந்தது. டாக்டர்கள் சிவகுமார், செல்வமணி, ஜெயபாண்டியன், கணேசன், சம்பத் குமார், தாமஸ் சேவியர், கிருஷ்ணன், ராஜன், குமார் ஏற்பாடுகள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us