ADDED : அக் 12, 2025 05:15 AM
திருமங்கலம் : திருமங்கலம் சீயோன் நகர் சமையல் மாஸ்டர் ரவீந்திரன் 66.
மகள் சத்யாவுடன் நேற்று முன்தினம் மாலை திருமங்கலத்திற்கு டூவீலரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். சியோன் நகர் சர்ச் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து திருமங்கலத்திற்கு வலையபட்டி முத்து என்பவர் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் ரவீந்திரன் இறந்தார். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


