ADDED : செப் 26, 2025 03:51 AM

மதுரை, செப். 26-
மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
காலியாக உள்ள 1500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர், இரவுக்காவலர், ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமலபடுத்த வேண்டும். கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகட்டும் திட்டங்களுக்கும் தொகையை ரூ.6 லட்சமாக வழங்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டதலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர். பொருளாளர் அமுதரசன் நன்றி கூறினார்.