Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஒரே டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பதவி உயர்வில் பாரபட்சம் நீர்வளத்துறையில் பரிதவிப்பு

ஒரே டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பதவி உயர்வில் பாரபட்சம் நீர்வளத்துறையில் பரிதவிப்பு

ஒரே டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பதவி உயர்வில் பாரபட்சம் நீர்வளத்துறையில் பரிதவிப்பு

ஒரே டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பதவி உயர்வில் பாரபட்சம் நீர்வளத்துறையில் பரிதவிப்பு

ADDED : செப் 25, 2025 11:55 PM


Google News
மதுரை: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஒரே நேரத்தில் தேர்வெழுதிய சிவில் இன்ஜினியர்கள் பல்வேறு துறைகளில் பணியிடம் பெற்ற நிலையில், பதவி உயர்வு மட்டும் பல ஆண்டுகள் வித்தியாசத்தில் பாரபட்சமாக வழங்கப்படுகிறது.

சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் 2007ல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் ஒரே அறிவிப்பாணை மூலம் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளுக்கு விண்ணப்பித்தனர். தேர்வானோர் உதவி பொறியாளர்களாக நியமிக்கப்பட்டனர். மற்ற துறைகளில் அதே ஆண்டில் அதே நாளில் சேர்ந்தவர்களுக்கு உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் என இருகட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டது.

நீர்வளத்துறையில் சேர்ந்த 480 பேரில் 30 சதவீதம் பேருக்கு 2021 - 22 லும், 2004 டிசம்பரில் 60 சதவீதம் பேருக்கும் உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. மீதி 10 சதவீதம் பேருக்கு 18 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் 2009 பேட்ச்சில் சேர்ந்த 200 உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் தவிக்கின்றனர். காலிப்பணியிடங்கள் முழுமையாக இல்லாததும் ஒரு காரணம் என்கின்றனர் பொறியியல் சங்கத்தினர்.

அவர்கள் கூறியதாவது:

பொதுப்பணித்துறையில் 2007 ல் உதவி பொறியாளராக சேர்ந்தவர்கள் இரு கட்ட பதவி உயர்வு பெற்று செயற்பொறியாளர்களாக உள்ளனர். ஐந்தாண்டுகள் நிறைவடையும் முன்பாகவே காலிப்பணியிடங்களை காரணம் காட்டி 2019ல் சேர்ந்த உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறையிலும் இதே நிலை தான் உள்ளது. நீர்வளத்துறையில் தற்போது வரை காலிப்பணியிடம் இல்லாத காரணத்தால் பதவி உயர்வு பெறாமலேயே எங்களில் பலர் பணி ஓய்வுபெற உள்ளனர்.

அயலகப் பணிக்கு மாற்றலாம்: நீர்வளத்துறையில் உள்ள பொறியாளர்கள் மீன்வளத்துறை, ஹிந்து அறநிலையத்துறை, போலீஸ் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் அயலகப் பணிக்கு தற்காலிக அடிப்படையில் (டெபுடேஷன்) நியமிக்கப்படுகின்றனர். அதேபோல 2007 ல் மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கும் 2009 பேட்ஜில் உள்ள உதவி பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அயலகப் பணிக்கு மாற்ற வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us