ADDED : ஜூன் 09, 2025 02:29 AM

வாடிப்பட்டி: சமயநல்லுாரில் நான்கு வழிச்சாலைக்கு செல்லும் ரோட்டில் வரிசை கட்டி நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
மதுரையிலிருந்து திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், சோழவந்தான் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் திருமங்கலம், விருதுநகர் பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
சமயநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே திண்டுக்கல் நான்கு வழிச்சாலை ரோட்டில் இருபுறமும் கனரக லாரிகள், சிமென்ட் கலவை இயந்திரங்கள், வேன்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. சில வாகனங்கள் நாள் கணக்கில் நிற்கின்றன.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலை குறுகி போக்குவரத்து பாதிக்கிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.