ADDED : செப் 24, 2025 06:22 AM
மதுரை : மதுரை நகர் தி.மு.க., சார்பில் புதுாரில் 'ஓரணியில் தமிழ்நாடு' தொடர்பான பொதுக்கூட்டம் வட்டச் செயலாளர் வேலு தலைமையில் நடந்தது.
பகுதிச் செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்றார். நகர் செயலாளர் தளபதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கல்யாணம் பேசினார்.
மேயர் இந்திராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் ராகவன், பகுதி செயலாளர் சரவணன், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் திலகவதி, வட்டச் செயலாளர்கள் மகேந்திரன், மருது பங்கேற்றனர்.