Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலச்சங்க நிர்வாகியை தாக்கிய தி.மு.க., செயலர் பதவி பறிப்பு

நலச்சங்க நிர்வாகியை தாக்கிய தி.மு.க., செயலர் பதவி பறிப்பு

நலச்சங்க நிர்வாகியை தாக்கிய தி.மு.க., செயலர் பதவி பறிப்பு

நலச்சங்க நிர்வாகியை தாக்கிய தி.மு.க., செயலர் பதவி பறிப்பு

ADDED : அக் 15, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
மதுரை:மதுரையில் பூங்கா அமைப்பது தொடர்பான பிரச்னையில், நலச்சங்க நிர்வாகியை தாக்கிய தி.மு.க., பகுதி செயலர் பதவி பறிக்கப்பட்டது.

மதுரை பைபாஸ் ரோட்டில் வேல்முருகன் நகர் குடியிருப்பு சங்கத்திற்கான தேர்தல் ஜூனில் நடந்தது.

இதில், தி.மு.க., வார்டு கவுன்சிலரான அமுதாவின் கணவரும், பகுதி செயலருமான தவமணி அனைத்து பதவிகளுக்கும், சிலரை வேட்பாளராக நிறுத்தி தோல்வியை தழுவினார்.

அன்று முதல் குடியிருப்பு சங்க நிர்வாகிகளுடன் தவமணி மோதல் போக்கை கையாண்டார்.

வேல்முருகன் நகரில், 20 ஆண்டுகளாக பொது பாதையாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் மாநகராட்சி இடத்தில் கவுன்சிலர் அலுவலகம் கட்ட ஏற்பாடு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டத்தை கிடப்பில் போட்டார்.

பின், அந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்தார். இதற்கு சங்க நிர்வாகிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடை பெற்றனர்.

இதை மீறி தவமணி, கவுன்சிலர் அமுதா உள்ளிட்டோர் பூமி பூஜை செய்ய வந்தபோது, ஒருங்கிணைப்பாளர் பழனிகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து, தி.மு.க., அரசை விமர்சித்தனர்.

இதில், ஆத்திரமுற்ற தவமணி, தன் ஆதரவாளர்களுடன் பழனிகுமார் வீட்டிற்குள் புகுந்து அவரையும், மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக, தவமணி மீது ஐந்து பிரிவுகளில் எஸ்.எஸ்., காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து, சம்மட்டிபுரம் பகுதி கழக செயலர் பதவியில் இருந்து தவமணியை தி.மு.க., தலைமை அதிரடியாக நீக்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us