/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உழவர் நல சேவை மையம் ரூ.6 லட்சம் மானியம் உண்டு உழவர் நல சேவை மையம் ரூ.6 லட்சம் மானியம் உண்டு
உழவர் நல சேவை மையம் ரூ.6 லட்சம் மானியம் உண்டு
உழவர் நல சேவை மையம் ரூ.6 லட்சம் மானியம் உண்டு
உழவர் நல சேவை மையம் ரூ.6 லட்சம் மானியம் உண்டு
ADDED : செப் 24, 2025 06:08 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது என வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: வேளாண்மையில் பட்டம், பட்டய படிப்பு முடித்தவர்கள், வேலை இல்லா பட்டதாரிகள் சுய தொழில் துவங்கும் வகையிலும், நிலையான வருமானம் ஈட்டும் வகையிலும் இம் மையம் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தரமான விதைகள், இடு பொருட்கள், இயற்கை இடுபொருட்கள்,கால்நடை தீவணங்கள் நியாயமான விலையில் விற்பதோடு, அனைத்து ஆலோசனையும் வழங்கப்படும். 20 - 45 வயது உள்ளவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். அரசு பணியில் இருக்கக் கூடாது.
ஆதார், பள்ளிச் சான்றிதழ்கள், பட்டச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஜி.எஸ்.டி. எண், நிரந்தர வங்கி கணக்கு, பான் கார்டு, வங்கியில் பெறப்பட்ட விரிவான திட்ட அறிக்கையுடன் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் தொழில் தொடங்கினால் ரூ.3 லட்சம், ரூ.20 லட்சத்தில் தொடங்கினால் ரூ. 6 லட்சம் மானியம் வழங்கப்படும் என்றார்.