/உள்ளூர் செய்திகள்/மதுரை/மடை மீது அமைத்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் அவதி * குமுறும் விவசாயிகள்மடை மீது அமைத்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் அவதி * குமுறும் விவசாயிகள்
மடை மீது அமைத்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் அவதி * குமுறும் விவசாயிகள்
மடை மீது அமைத்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் அவதி * குமுறும் விவசாயிகள்
மடை மீது அமைத்த ரோட்டை பயன்படுத்த முடியாமல் அவதி * குமுறும் விவசாயிகள்
ADDED : ஜன 28, 2024 05:07 AM

மேலுார், : மேலவளவு கண்மாயில் தண்ணீர் வெளியேறும் மடை மீது மெட்டல் ரோடு போட்டுள்ளதாக கொட்டாம்பட்டி ஒன்றிய அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
மேலவளவு - சோமகிரிபட்டி வரை ஓரடுக்கு மெட்டல் ரோடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32.22 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் ஒரு புறம் பறம்பு கண்மாய் 110 ஏக்கரில் உள்ளது. இக் கண்மாய் நிரம்பினால் ரோட்டின் மறுபுறம் உள்ள 355 ஏக்கர் நிலம் பாசனம் பெறும். ஆனால் கண்மாயில் தண்ணீர் வெளியேறும் 2 இடங்களில் மடை மீது ரோடு அமைத்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயி சிதம்பரம் கூறியதாவது: ரோட்டின் ஒருபுறம் பறம்பு கண்மாய், மறு புறம் வயல் உள்ளது. இக் கண்மாய் தண்ணீர் வெளியேறும் மடையை மாற்றி அமைக்காமல், அதன்மீதே ரோடு அமைத்துள்ளனர். மடையை மாற்றி அமைக்கவும், ரோட்டை அகலப்படுத்தவும் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த ரோட்டில் வாகனங்களில் இடுபொருட்களுடன் செல்லும் போது மடை உடைவதுடன், வாகனங்கள் கவிழும் அபாயம் உள்ளது. ரோடு அமைத்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது, என்றார்.
பொறியாளர் கணேசன் கூறுகையில், நீர்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மடை மற்றும் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


