ADDED : பிப் 25, 2024 04:02 AM
வாடிப்பட்டி, : பரவை பேரூராட்சி சமுதாயத்தில் ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன், பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் பெண்களுக்கு சணல் பை தயாரித்தல் பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாரள் ரூபி முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் கலாமீனா துவக்கி வைத்து உபகரணங்கள் வழங்கினார். ஜி.எச்.சி.எல்., நிறுவன சி.எஸ்.ஆர்., அலுவலர் சுஜின் பயிற்சியின் நோக்கம், செய்முறை, சந்தைப்படுத்துதல் குறித்தும், ஜூட் பேக் தயாரிக்கும் முறை, அதன் பயன்களை பயிற்சியாளர் முத்துச் செல்வி விளக்கினர். பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜா, கவுன்சிலர் சவுந்தரபாண்டியன் பங்கேற்றனர்.