ADDED : அக் 10, 2025 03:09 AM
மதுரை: அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மதுரை மீனாம்பாள்புரம் முல்லைநகரில் உள்ள பெட்கிராட் நிறுவனத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச தையல், ஆரி எம்பிராய்டரி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு மாத கால பயிற்சியில் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். குறைந்தது எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சீருடை, இலவச உபகரணங்கள் வழங்கப்படும். ஆதார், ரேஷன் அட்டை, கல்விச்சான்றிதழ், போட்டோவுடன் முன்பதிவு செய்ய வேண்டும். அலைபேசி: 98946 90092.


