இடையபட்டியில் ஜெனரல் கமாடோர் ஆய்வு
இடையபட்டியில் ஜெனரல் கமாடோர் ஆய்வு
இடையபட்டியில் ஜெனரல் கமாடோர் ஆய்வு
ADDED : அக் 19, 2025 03:54 AM
மேலுார்: இடையபட்டியில் உள்ள என்.சி.சி., பயிற்சி அகாடமியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் என்.சி.சி. இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ஜெனரல் கமாடோர் ராகவ் ஆய்வு செய்தார்.
கமாண்டர்கள் சவுகான், கர்னல் சமித்கார்கி, கேப்டன் பிரேம் குமார் வரவேற்றனர். 2026 புதுடில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்பவர்களுக்கான பயிற்சிகள், குழு பயிற்சிகள், கலாசார, ஒத்திகைகள் குறித்து ஆய்வு செய்தார். மதுரை, திருச்சி, கோவையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே நடந்த குழு போட்டியில் வெற்றி பெற்ற கோவை வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


