குவாரி உரிமம் ரத்து அரசாணை வெளியீடு
குவாரி உரிமம் ரத்து அரசாணை வெளியீடு
குவாரி உரிமம் ரத்து அரசாணை வெளியீடு
ADDED : அக் 04, 2025 03:56 AM
மதுரை: திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் கல்குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் முன் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் போராடிய கிராமத்தினர் 380 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பூங்கா முருகன் கோயில் அருகே திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
டி.ஆர்.ஓ., கலெக்டர் நேர்முக உதவியாளர், ஆர்.டி.ஓ., தாசில்தார் உட்பட வருவாய் அதிகாரிகள் நடத்திய ஐந்து கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தன.
மக்களோ, எழுத்துப்பூர்வமான உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனிடையே குவாரியின் உரிமம் ரத்துசெய்யப்படும் என இரவு 11:00 மணியளவில் அரசாணை வெளியிடப்பட்டது.
கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டதால் கலைந்து சென்றனர்.


