Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கொய்யா விவசாயிகளுக்கான கலந்தாய்வு மாவட்டத்தில் முதன்முறை

கொய்யா விவசாயிகளுக்கான கலந்தாய்வு மாவட்டத்தில் முதன்முறை

கொய்யா விவசாயிகளுக்கான கலந்தாய்வு மாவட்டத்தில் முதன்முறை

கொய்யா விவசாயிகளுக்கான கலந்தாய்வு மாவட்டத்தில் முதன்முறை

ADDED : செப் 18, 2025 05:45 AM


Google News
மதுரை : கொய்யாப்பழங்கள் விற்பனையை மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மதுரையில் முதன்முறையாக அலங்காநல்லுார் முடுவார்பட்டியில் கொய்யா உற்பத்தியாளர், வாங்குவோர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக மேலாளர் கவிமுகில் கொய்யா ஏற்றுமதி செய்யும் வழிமுறையை விளக்கினார். கொய்யா, அதன் மதிப்புக் கூட்டுப் பொருட்களை சந்தைப்படுத்த வட்டார அளவில் இ - நாம் சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தினர்.

உழவன் உற்பத்தி யாளர் நிறுவனங்கள் மூலம் கொய்யா மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயாரிப்பது, சந்தைப்படுத்துவது குறித்து வேளாண் விற்பனை, வணிகத் துறை துணை இயக்குநர் மெர்ஸி ஜெயராணி தெரிவித்தார்.

தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா பேசுகையில், ''அலங்காநல்லுார் பகுதியில் கொய்யா 1151 எக்டேர், மதுரை மேற்கு, திருமங்கலம், டி.கல்லுப்பட்டி , வாடிப்பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி என மொத்தம் 1800 எக்டேரில் மாவட்டத்தில் கொய்யா சாகுபடியாகிறது. அந்தந்த பகுதிகளில் விளையும் பொருட்களை மதிப்பு கூட்டுவதன் மூலம் கூடுதல் சந்தை வாய்ப்பு பெறலாம். சிறு யூனிட்கள் மூலம் உற்பத்தி செய்யலாம்'' என்றார். தோட்டக்கலை உதவி இயக்குநர் ரிஜ்வானா பர்வீன், தோட்டக்கலை அலுவலர்கள் ஜோதிலட்சுமி, ஜெயக் குமார், ரமணன் ஏற்பாடு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us