ADDED : பிப் 25, 2024 04:04 AM
பேரையூர், : பேரையூர் அருகே எல்.கொட்டாணிப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி மாசி மகம் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஆஞ்சநேயருக்கும் ஹயகிரீவருக்கும் கும்ப பூஜை, கலச பூஜை, யாக பூஜை, கோமாதா பூஜை, பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
பேனா, பென்சில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.