Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பல்கலை பணி நியமன முறைகேடு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பல்கலை பணி நியமன முறைகேடு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பல்கலை பணி நியமன முறைகேடு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பல்கலை பணி நியமன முறைகேடு வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : செப் 20, 2025 05:36 AM


Google News
மதுரை: நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 2015-- 16 ல் பேராசிரியர், உதவி, இணை பேராசிரியர் உள்ளிட்ட சில பணி நியமனங்களில் விதி மீறலால் முறைகேடு நடந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், பல்கலை பதிவாளருக்கு புகார் அனுப்பினேன். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின் நடவடிக்கை இல்லை. விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிஷோர் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக உயர்கல்வித்துறை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், பல்கலை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, இதுபோல் நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து அக்.28ல் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us