Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ புதிய மத்திய தொழிலாளர் சட்டத்தில் சிறப்பம்சங்கள் பாரதிய மஸ்துார் சங்கம் வரவேற்பு

 புதிய மத்திய தொழிலாளர் சட்டத்தில் சிறப்பம்சங்கள் பாரதிய மஸ்துார் சங்கம் வரவேற்பு

 புதிய மத்திய தொழிலாளர் சட்டத்தில் சிறப்பம்சங்கள் பாரதிய மஸ்துார் சங்கம் வரவேற்பு

 புதிய மத்திய தொழிலாளர் சட்டத்தில் சிறப்பம்சங்கள் பாரதிய மஸ்துார் சங்கம் வரவேற்பு

ADDED : டிச 03, 2025 06:43 AM


Google News
மதுரை: 'மத்திய அரசின் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களில் வரவேற்கும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன' என்று பாரதிய மஸ்துார் சங்க மாநில அமைப்புச் செயலாளர் தங்கராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு சமீபத்தில் 29 தொழிலாளர் சட்டங்களை, குறைந்தபட்ச ஊதியம், சமூகபாதுகாப்பு, தொழில் உறவு, தொழிலாளர் பாதுகாப்பு என்ற நான்கு வகைப்பாட்டுக்குள் இருக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. இவற்றில் முதல் இரு சட்டங்களையும் நாங்கள் வரவேற்கிறோம். மற்ற இரு சட்டங்களிலும் 12 திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

மொத்தத்தில் இத்திருத்த சட்டம் வரவேற்கக் கூடியதே. காரணம் பல புதிய தொழில்கள் பல உருவாகியுள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இச்சட்டம் மிகுந்த பாதுகாப்பை வழங்குகிறது. பத்துக்கு மேல் தொழிலாளர் பணியாற்றினால் இ.எஸ்.ஐ., வசதி, 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓராண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை, ஓராண்டு பணியாற்றினாலே கருணைத் தொகை வழங்கல், பெண்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் என்பன போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.

தொழில் பாதுகாப்பு அம்சமாக தொழிற்சாலைக்குள் மட்டுமின்றி, பணிக்கு வரும் வழியில் விபத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஒருவர் ஓய்வு பெற்று வீடு திரும்பும் முன் விபத்து நடந்து பாதித்தாலும் இது அவருக்கும் பொருந்தும் என்பன போன்ற சிறந்த அம்சங்கள் உள்ளதால் தொழிலாளர்கள் பலரும் பயன்பெறுவர் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us