ADDED : பிப் 25, 2024 04:56 AM

வாடிப்பட்டி : பரவை பகுதியில் பூட்டிய வீடுகளில் திருட்டு தொடர்பாக சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், தனிப்படை எஸ்.ஐ.,க்கள் மணிகண்டன், வெற்றிவேல், போலீசார் கார்த்திக், செல்லப்பாண்டி, விஜி, ஹவுஸ் முகைதீன்கான் விசாரித்தனர்.
வாடிப்பட்டியில் வசிக்கும் வடுகபட்டி கார்த்திக் கண்ணன் 33, பரவையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 32 பவுன் நகைகளை திருடி மனைவி சித்ரா 28, மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் குற்றாலம் சுற்றுலா சென்று வந்தது தெரிந்தது. கார்த்திக் கண்ணன், உடந்தையாக இருந்த சித்ராவை போலீசார் கைது செய்தனர். 30 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.