ADDED : அக் 07, 2025 04:20 AM
சோழவந்தான்:ஊ மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர்வேத பிரிவுக்கான புதிய கட்டடம் திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் அன்னகாமு முன்னிலை வகித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல்குமார், ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் ஷேக் பரீத், மருத்துவ அலுவலர் கவுதம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


