Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மழை பாதிப்பு பகுதிகளில் கலெக்டர், கமிஷனர் ரோடுகளை கொஞ்சம் 'கவனிக்க' உத்தரவிடுங்க

மழை பாதிப்பு பகுதிகளில் கலெக்டர், கமிஷனர் ரோடுகளை கொஞ்சம் 'கவனிக்க' உத்தரவிடுங்க

மழை பாதிப்பு பகுதிகளில் கலெக்டர், கமிஷனர் ரோடுகளை கொஞ்சம் 'கவனிக்க' உத்தரவிடுங்க

மழை பாதிப்பு பகுதிகளில் கலெக்டர், கமிஷனர் ரோடுகளை கொஞ்சம் 'கவனிக்க' உத்தரவிடுங்க

ADDED : அக் 22, 2025 12:37 AM


Google News
மதுரை: மதுரை நகரில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறானது. கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் குழு பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டது.

இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் நகரில் கர்டர் பாலம் சுரங்கப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர்த் தேங்கி போக்குவரத்துக்கு சவாலாகியது. அப்பகுதிகளில் கலெக்டர், கமிஷனர் நேரடியாக ஆய்வு செய்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். மாநகராட்சி பகுதியில் நாராயணபுரம், கரிசல்குளம் கண்மாய்களை கண்காணிக்க உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தீவிர துாய்மை பணி மழைகாரணமாக தீபாவளி நாளில் ரோடுகளில் சேர்ந்த பட்டாசு வெடிப்பு உள்ளிட்ட குப்பை அகற்றுவதில் மாநகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. துணைமேயர் நாகராஜன், கமிஷனர் சித்ரா முன்னிலையில் பல்வேறு பகுதிகளில் துாய்மைப் பணியாளர்கள் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளியன்று மட்டும் நான்குமாசி வீதிகள், விளக்குத்துாண், நேதாஜி ரோடு பகுதிகளில் 331 டன் குப்பை அகற்றப்பட்டது. கடந்த நான்கு நாட்களிலும் நகர் முழுவதும் 2672 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.

மரண பள்ளங்கள் நகரில் பல்வேறு ரோடுகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டு மழை நீர் தேங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் 'பேட்ச் ஒர்க்' செய்த ரோடுகளில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகிறது. கோரிப்பாளையம் மேம்பாலப் பணியால் மீனாட்சி கல்லுாரி ரோட்டில் நுாற்றுக்கணக்கான சிறிய பள்ளங்களில் வாகனங்கள் போராடி கடக்க வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோடு உட்பட பள்ளங்கள் உள்ள அனைத்து ரோடுகளையும் உடனே பராமரிக்க வேண்டும்.

நேற்று பகல் முழுவதும் மழை

மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று காலை 7:00 மணி முதல் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்தது. பகலிலேயே குளிருடன் அந்திமாலை போல காணப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்தது. பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை (மி.மீ.,யில்): மதுரை வடக்கு 2.2, தல்லாகுளம் 1.6, விரகனுார் 0.4, சிட்டம்பட்டி 10.8. இடையபட்டி 1, தனியாமங்கலம் 1.5, மேலுார் 2.4, வாடிப்பட்டி 35, சோழவந்தான் 20, சாத்தையாறு அணை 7, மேட்டுப்பட்டி 3.2, ஆண்டிபட்டி 31.2, விமான நிலையம் 2.4, பேரையூர் 9.8, எழுமலை 0.6.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us