Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையில் ஜூலை 6ல் மாநாடு ஜவாஹிருல்லா அறிவிப்பு

மதுரையில் ஜூலை 6ல் மாநாடு ஜவாஹிருல்லா அறிவிப்பு

மதுரையில் ஜூலை 6ல் மாநாடு ஜவாஹிருல்லா அறிவிப்பு

மதுரையில் ஜூலை 6ல் மாநாடு ஜவாஹிருல்லா அறிவிப்பு

ADDED : ஜூன் 12, 2025 06:15 AM


Google News
மதுரை: 'அரசியல் பிரதிநிதித்துவம், வக்ப் சட்டத்தை திரும்ப பெறக்கோரி மதுரையில் ஜூலை 6 மாநாடு நடத்தப்படும்' என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:

நாட்டில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அதற்கேற்ப பிரதிநிதித்துவம் இல்லை. பார்லிமென்டில் உள்ள 776 உறுப்பினர்களில் 39 பேர் மட்டுமே முஸ்லிம்கள். நாடு முழுவதும் உள்ள 4123 எம்.எல்.ஏ.,க்களில் 296 (7.18 சதவீதம்) பேர் மட்டும் முஸ்லிம்கள்.

தமிழக சட்டசபையில் 15 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது 7 பேர் மட்டும் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அதிக முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

த.வெ.க., கட்சி சமீபத்தில்தான் துவங்கப்பட்டுள்ளது. தனது வீட்டில் சோதனை செய்தவருக்கே கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கி, தமிழக மக்களின் நம்பிக்கையை விஜய் இழந்து விட்டார்.

இதன் மூலம் அவரை பா.ஜ., இயக்குவது தெளிவாகிறது. அவர் எடுப்பார் கைப்பிள்ளை என்பது இதில் தெரிகிறது என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us