/உள்ளூர் செய்திகள்/மதுரை/இறுதி மூச்சு வரை வாசிக்க வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சுஇறுதி மூச்சு வரை வாசிக்க வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
இறுதி மூச்சு வரை வாசிக்க வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
இறுதி மூச்சு வரை வாசிக்க வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
இறுதி மூச்சு வரை வாசிக்க வேண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு
ADDED : பிப் 25, 2024 04:57 AM
மதுரை : ''இறுதி மூச்சு வரை புத்தகங்களை வாசிக்க வேண்டும்'' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
தமிழக சட்டக் கல்லுாரி மாணவர்கள் மன்றம் (புட்லாவ்ஸ்) சார்பில் சட்டத் திருவிழா மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடந்தது. ஏ.பி.வி.பி., தேசிய செயலாக்கக்குழு உறுப்பினர் சுசீலா வரவேற்றார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: மாணவர்கள் பெரிதாக ஆசைப்பட வேண்டும். அப்துல்கலாம் கூறியதுபோல் கனவு காண வேண்டும். நான் 8வது வகுப்பு படித்தபோதே உயர்நீதிமன்ற நீதிபதியாக வேண்டும் என கனவு கண்டேன். அது நிறைவேறியுள்ளது.
அம்பேத்கர் தினமும் 18 மணி நேரம் உழைத்தார். அதுபோல் கடின உழைப்பு தேவை. இறுதி மூச்சு உள்ளவரை புத்தகங்களை வாசிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் வெங்கடாச்சலய்யா. ஓய்வு பெற்று 21 ஆண்டுகளுக்கு பிறகும் நீதிமன்ற தீர்ப்புகளை மதிப்பீடு செய்து வருகிறார் என்றார்.
'தேசிய மறுமலர்ச்சியில் மாணவர்களின் பங்கு' தலைப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, 'அயோத்தி தீர்ப்பு கடந்து வந்த பாதை' தலைப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் யோகேஸ்வரன், 'சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கு எதிர்கால வாய்ப்புகள்' தலைப்பில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லட்சுமி சங்கர் பேசினர்.
ஏ.பி.வி.பி., தேசிய செயலாளர் ஷ்வரன் பி.ராஜ், தென் தமிழக மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணகுமார், மன்ற தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் பங்கேற்றனர். மன்ற மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா காயத்ரி தொகுத்து வழங்கினார். தென் தமிழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.