ADDED : பிப் 11, 2024 12:43 AM

உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுாரில் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கிடாமுட்டு போட்டி நடந்தது.
ஜமீன்தார் பாண்டியர், ஊராட்சி தலைவர் பாலமுருகமகாராஜா, ஒருங்கிணைப்பாளர் சோலைரவி முன்னிலை வகித்தனர். 100க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள் ஜோடிகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கும், சமஜோடி கிடாக்களுக்கும் பரிசு வழங்கினர். தமிழ்நாடு கிடாமுட்டு சங்கத்தினர் போட்டிகளை நடத்தினர்.
இன்று(பிப்.,11) கும்பாபிஷேகமும், நாளை ஜல்லிக்கட்டும் நடக்கிறது.