/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டாஸ்மாக்கில் திருட்டு தாமதமாக வழக்குப்பதிவு டாஸ்மாக்கில் திருட்டு தாமதமாக வழக்குப்பதிவு
டாஸ்மாக்கில் திருட்டு தாமதமாக வழக்குப்பதிவு
டாஸ்மாக்கில் திருட்டு தாமதமாக வழக்குப்பதிவு
டாஸ்மாக்கில் திருட்டு தாமதமாக வழக்குப்பதிவு
ADDED : ஜூன் 14, 2025 05:29 AM
திருமங்கலம்: திருமங்கலம் தோப்பூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளராக ராஜசேகர் உள்ளார். விற்பனையாளர்கள் ரவிக்குமார், கொத்தளம் உள்ளனர். கடந்த மே 3ல் இரவு 10:00 மணிக்கு ராஜசேகர் கடையைப் பூட்டிச் சென்றார். மறுநாள் காலை கடை திறக்க வந்தபோது பூட்டு உடைபட்டு உள்ளே இருந்த மது பாட்டில்கள் திருடப்பட்டது தெரிந்தது.
ராஜசேகர் டாஸ்மாக் உதவி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அலுவலக உதவியாளர்கள் சுப்பிரமணி, பாலகிருஷ்ணன் கடையில் ஆய்வு செய்ததில் ரூ. 15 ஆயிரம் மதுபாட்டில்கள் திருடு போனது தெரிந்தது. சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்ததில் அதிகாலை 3:45 மணிக்கு அடையாளம் தெரியாத குரங்கு குல்லா அணிந்த நபர் மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரிந்தது.
ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் மிகவும் தாமதமாக இந்த சம்பவம் குறித்து புகார், வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.