Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை - நத்தம் பாலத்தில் லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி; 6 பேர் காயம்

மதுரை - நத்தம் பாலத்தில் லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி; 6 பேர் காயம்

மதுரை - நத்தம் பாலத்தில் லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி; 6 பேர் காயம்

மதுரை - நத்தம் பாலத்தில் லாரி மீது கார் மோதல் டிரைவர் பலி; 6 பேர் காயம்

ADDED : மார் 21, 2025 04:25 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் தரிசனம்முடித்து காரில் திரும்பியபோது நத்தம் பறக்கும் பாலத்தில் பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியதில் டிரைவர் பலியானார். சென்னையைச் சேர்ந்த 6 பேர் காயமுற்றனர்.

சென்னையைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பத்தினர் மதுரை வந்து வாடகை காரில் நேற்று காலை அழகர்கோவில் சென்றனர். காரை மதுரை காமராஜபுரம் மதியழகன் 38, ஓட்டினார்.

அங்கு தரிசனம் முடித்து மதியம் 2:00 மணிக்கு மதுரை நோக்கி நத்தம் பறக்கும் பாலத்தில் திரும்பினர். ரிசர்வ்லைன் அருகே கார் வேகமாக வந்த போது பாலத்தில் நடுவில் செங்கல் லாரி ஒன்று பஞ்சராகி நின்றது.

அது சென்றுக்கொண்டிருப்பதாக மதியழகன் கருதி காரின் வேகத்தை குறைக்காமல் தொடர்ந்து சென்றபோது லாரி மீது மோதியது. இதில் கார் நொறுங்கியதில் மதியழகன் சம்பவயிடத்தில் பலியானார்.

காரில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து நடந்ததும் காரின் 'ஏர் பேக்' செயல்பட்ட போதும் மதியழகன் இறந்துள்ளார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

86 விபத்தும், 23 இறப்பும்


ஏழு கி.மீ., துாரம் கொண்ட இப்பாலத்தில் போக்குவரத்து குறைவு என்பதால் வாகனங்கள் அதிவேகமாக 'பறப்பது' தொடர்கிறது. பாலம் திறந்த நேரத்தில் டூவீலரில்அதிவேகமாக வந்த இளைஞர், தடுப்புச்சுவரை தாண்டி கீழே விழுந்து இறந்தார்.

பாலத்தில் அடிக்கடிசிறுசிறு விபத்துகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. கடந்த 25 மாதங்களில் 86 விபத்துகள் நடந்துள்ளன. 23 பேர் இறந்துள்ளனர்.

போலீசாரும், நெடுஞ்சாலைத்துறையும் குறிப்பிட்ட வேகத்தில் செல்லுமாறு தொடர்ந்து எச்சரித்தாலும் விபத்தும், இறப்பும் தொடர்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us