/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை--ராமநாதபுரம் மாவட்ட சிட்பண்ட் செயற்குழு கூட்டம் மதுரை--ராமநாதபுரம் மாவட்ட சிட்பண்ட் செயற்குழு கூட்டம்
மதுரை--ராமநாதபுரம் மாவட்ட சிட்பண்ட் செயற்குழு கூட்டம்
மதுரை--ராமநாதபுரம் மாவட்ட சிட்பண்ட் செயற்குழு கூட்டம்
மதுரை--ராமநாதபுரம் மாவட்ட சிட்பண்ட் செயற்குழு கூட்டம்
ADDED : ஜூன் 23, 2025 05:38 AM
மதுரை : மதுரை- - ராமநாதபுரம் மாவட்ட சிட்பண்ட் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இதில் சங்கத் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: சிட்பண்ட் என்பது 1982 முதல்,ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி இயங்கும் நிறுவனம்.இந்தியா முழுவதும் 25 ஆயிரம் நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 2500க்கும் மேற்பட்ட சிட்பணடுகள் உள்ளன. நாற்பது ஆண்டுகளை கடந்த பல நிறுவனங்கள் மதுரையில் இருக்கின்றன.
சில அங்கீகாரம் இல்லாத கம்பெனிகள் செய்யும் தவறால் ஒட்டுமொத்த நிறுவனங்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து இன்றுவரை பதிவு பெற்ற சிட்பண்ட் கம்பெனி ஏமாற்றியதாக ஒன்றைக் காட்ட முடியாது. சிட்பண்ட் கம்பெனி பணம் முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஆர்வமுள்ளோருக்கு 6 மாதம் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம். அடுத்த 5 ஆண்டுக்குள் வீட்டிலேயே அலுவலகம் தொடங்க வழிகாட்டல் வழங்கப்படும்.
இளைய தலைமுறையினரிடம் சிட்பண்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். ஆக.19ல் நடக்க உள்ள சிட்பண்ட் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
சங்க செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் புருஷோத்தமன், துணைத்தலைவர் மோகன்தாஸ், இணைச்செயலாளர் குமார் உடனிருந்தனர்.