/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஜவுளிக்கடைகளின் மாடி வழியே புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் மதுரையில் கைது ஜவுளிக்கடைகளின் மாடி வழியே புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் மதுரையில் கைது
ஜவுளிக்கடைகளின் மாடி வழியே புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் மதுரையில் கைது
ஜவுளிக்கடைகளின் மாடி வழியே புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் மதுரையில் கைது
ஜவுளிக்கடைகளின் மாடி வழியே புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் மதுரையில் கைது
ADDED : செப் 25, 2025 03:18 AM

மதுரை : மதுரையில் ஜவுளிக்கடைகளை குறிவைத்து அடுத்தடுத்து கொள்ளையடித்து வந்த 35 வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை விளக்குத்துாண் நவபத்கானா தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் செப்.,19 இரவு மாடி வழியாக உள்ளே புகுந்த நபர், 8 கதவுகளின் பூட்டுகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து ஒவ்வொரு மாடியிலும் இருந்த கல்லா பெட்டிகளில் இருந்த மொத்தம் ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றார். இதே நபர் 20 நாட்களுக்கு முன் மகால் வடம்போக்கித்தெருவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றிலும் மாடி வழியாக புகுந்து ரூ.8 லட்சத்தை திருடியுள்ளார். இதுதொடர்பாக தெற்குவாசல் போலீசார் விசாரித்தனர்.
உதவிகமிஷனர் சந்திரலேகா, இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார், கோவை மாவட்டம் பொள்ளாச்சி குள்ளக்கபாளையத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சுந்தர்சிங் என்ற விஜில்குமாரை 40, கைது செய்தனர். இவர் மீது தமிழகம் முழுவதும் 35 வழக்குகள் உள்ளன.
போலீசார் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வசூலாகும் தொகையை கடையில் வைக்க வேண்டாம். இரவிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். மாடிப்படிகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும்' என்றனர்.