ADDED : அக் 06, 2025 04:32 AM
திருநகர் மதுரை அப்பல்லோ மருத்துவமனை, திருநகர் சந்தோஷ் பிசியோதெரபி கல்லுாரி சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கல்லுாரி தாளாளர் விஜயஸ்ரீ துவக்கி வைத்தார். டாக்டர் ஸ்ரீஷா தலைமையில் மருத்துவ நிபுணர்கள் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இ.சி.ஜி., எக்கோ இலவசமாக எடுக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்டோருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். பேராசிரியர்கள் வர்ணபிரியா, ஸ்டெல்லா, ஏஞ்சலின், நர்மதா முகாம் ஏற்பாடு செய்தனர்.


