/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மரபணு கண் புற்றுநோயை கண்டறிய நவீன ஆய்வகம்; அரவிந்த் கண் மருத்துவமனையில் அமைப்பு மரபணு கண் புற்றுநோயை கண்டறிய நவீன ஆய்வகம்; அரவிந்த் கண் மருத்துவமனையில் அமைப்பு
மரபணு கண் புற்றுநோயை கண்டறிய நவீன ஆய்வகம்; அரவிந்த் கண் மருத்துவமனையில் அமைப்பு
மரபணு கண் புற்றுநோயை கண்டறிய நவீன ஆய்வகம்; அரவிந்த் கண் மருத்துவமனையில் அமைப்பு
மரபணு கண் புற்றுநோயை கண்டறிய நவீன ஆய்வகம்; அரவிந்த் கண் மருத்துவமனையில் அமைப்பு
ADDED : மே 25, 2025 04:48 AM
மதுரை : இந்தியாவிலேயே முதல்முறையாக கண் புற்றுநோயை கண்டறிவதற்கான நவீன மரபணு ஆய்வகம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு விழா இம்மருத்துவமனையில் நேற்று நடந்தது. கவுரவ இயக்குனர் டாக்டர் நாச்சியார், சேர்மன் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்பிட் துறைத்தலைவர் டாக்டர் உஷா கிம் தலைமை வகித்து பேசியதாவது: கண் விழித்திரை புற்றுநோயில் 'ரெடினோ பிளாஸ்டோ' என்பது அரியவகை. மரபணு வழியாக பரவும். குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் குணப்படுத்தலாம். கருவிழி மத்தியில் வெண்நிறப்புள்ளி தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
பார்வை குறைபாடு, பார்வை இழப்பு என 3 மாதம் முதல் ஒன்றரை வயது குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய் கண் அறுவை சிகிச்சைகள் இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளன.
மரபணுக்கள் மூலம் பரவுவதை ஆரம்பத்திலேயே கண்டறிய இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கு நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயின் தீவிரத்தன்மை அறிந்து அதற்கேற்ப விரைவான சிகிச்சை வழங்க முடிகிறது. இவ்வாறு பேசினார்.