ADDED : அக் 07, 2025 04:18 AM
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் அக். 9,10ல் மாணவர்களுக்கான மாநில அளவிலான பல் திறன் போட்டிகள் நடக்கின்றன. பிற கல்லுாரி மாணவர்களும் பங் கேற்கலாம்.
முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், சுழற்கோப்பை, 2ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் மாணவர்கள் 99941 72162ல் முன்பதிவு செய்யலாம் என கல்லுாரி நிர்வாகத் தினர் தெரிவித்தனர்.


