Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எங்களுக்கு மட்டும் இல்லை பண்டிகை முன்பணம் ஆசிரியர் பயிற்றுநர்கள் குமுறல்

எங்களுக்கு மட்டும் இல்லை பண்டிகை முன்பணம் ஆசிரியர் பயிற்றுநர்கள் குமுறல்

எங்களுக்கு மட்டும் இல்லை பண்டிகை முன்பணம் ஆசிரியர் பயிற்றுநர்கள் குமுறல்

எங்களுக்கு மட்டும் இல்லை பண்டிகை முன்பணம் ஆசிரியர் பயிற்றுநர்கள் குமுறல்

ADDED : அக் 14, 2025 05:37 AM


Google News
மதுரை: கல்வித்துறையில் ஆசிரியர், அலுவலர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்கப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர்.

இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 900க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்ளனர். டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள். பள்ளிகளில் கற்றல் கற்பித்தல், கட்டடங்கள் ஆய்வு, எமிஸ் பதிவேற்றப்பணிகளை மேற்பார்வை செய்வது, இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, சிறப்பு குழந்தைகளுக்கு கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

இவர்களுக்கு தமிழக அரசு இந்தாண்டு உயர்த்தி அறிவிக்கப்பட்ட பண்டிகை முன்பணத்திற்கான நிதியை விடுவிக்கவில்லை.

இதுகுறித்து அனைத்து வட்டார வளமைய பட்டதாரிகள் ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பண்டிகை முன்பணம் இந்தாண்டு முதல் ரூ.20 ஆயிரமாக வழங்கப்படுகிறது. 2024ல் அக்டோபரில் வழங்க வேண்டிய அந்தாண்டுக்கான பண்டிகை முன்பணத்தை தாமதமாக, 2025 ஜனவரியில் அரசு வழங்கியது.

இதனால் ஒரே ஆண்டில் இரண்டு முறை வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தாமதமாக வழங்கப்பட்டதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும். எனவே, முந்தைய முன்பணம் பெற்றதற்காக செலுத்த வேண்டிய நிலுவை தொகையை ஒரே தவணையாக பிடித்தம் செய்துகொண்டு, புதிதாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட ரூ.20 ஆயிரத்தை இந்தாண்டு எங்களுக்கும் வழங்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us