ADDED : அக் 14, 2025 04:19 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி - பேரையூர் ரோடு பூதத்து அய்யனார் கோயில் வளாகத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது.
இதை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். புதிய அலுவலகத்தில் தேனி உதவிகமிஷனர் ஜெயதேவி, உசிலம்பட்டி ஆய்வாளர் கிருபாதேவி, கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.


