ADDED : அக் 07, 2025 04:12 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்காக சந்தை திடலுக்குள் ஒரு ஏக்கரை கையகப்படுத்தும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நேற்று அப்பகுதி மரங்களை அகற்ற முயன்றபோது வியாபாரிகள் எதிர்த்தனர். எம்.எல்.ஏ., அய்யப்பன், டி.எஸ்.பி., சந்திரசேகரன், நகராட்சி பொறியாளர் சசிகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
'கடை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் சந்தை திடலுக்குள் மாற்று இடம் ஒதுக்கித்தர நகராட்சி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என வியாபாரிகள் கூறினர். 'மாற்று இடம் ஒதுக்கித்தருகிறோம். அதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துவிட்டு மரக்கிளைகளை மட்டும் அகற்றினர்.


