ADDED : அக் 12, 2025 05:17 AM

மதுரை : மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமணர் கல்யாண மகாலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நகர் கிளைத் தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆகாஷ் பேமிலி கிளப் நிர்வாக இயக்குனர் பாலாஜி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தென்மண்டலத் தலைவர் இல.அமுதன், மாவட்ட தலைவர் பக்வத்சலம் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கோதண்டராமன், ஆடிட்டர் சி.வி.எஸ்.மணியன், வழக்கறிஞர் ரெங்கநாதன், சுந்தரராஜன், புதுார் கிளை நிர்வாகி ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர். பொருளாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.


