தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்

 மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஆக 26, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வடக்கு தாலுகா சத்திரப்பட்டியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது.

இதில் டி.ஆர்.ஓ., அன்பழகன், பயிற்சி கலெக்டர் சித்தார்த் போகர்னா, ஆர்.டி.ஓ., கருணாகரன், சமூகநலத் திட்ட பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ், தாசில்தார் கமலேஷ், துணைத் தாசில்தார் ராஜேஷ், ராஜா, ஆர்.ஐ., அனிதா மற்றும் வருவாய் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 58 பயனாளிகளுக்கு ரூ.3.99 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் அரசு திட்ட விளக்க அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இலவச பட்டா, பட்டா மாறுதல் உட்பட 235 மனுக்களும், மகளிர் உரிமைத் தொகைக்காக 150 மனுக்களும் வந்தன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us