ADDED : ஜூன் 10, 2025 01:43 AM

மேலுார்: சாத்தமங்கலம் அரிஹர புத்திர அய்யனார் கோயில் வைகாசி திருவிழா நேற்று துவங்கியது. 2 நாள் நடக்கும் திருவிழாவின் முதல் நாளான நேற்று பக்தர்கள் இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் இருந்து புரவிகள், சப்த கன்னிகள், அம்மன் உள்ளிட்ட சிலைகளை 17 கி.மீ., துாரத்தில் உள்ள சாத்தமங்கலம் மந்தைக்கு கொண்டு சென்றனர்.
இன்று( ஜூன் 10) மந்தையிலிருந்து புரவிகள் சின்ன, பெரிய அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பொங்கல் வைக்கப்படும்.