தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மரத்தடியில் பள்ளி வகுப்புகள்

மரத்தடியில் பள்ளி வகுப்புகள்

மரத்தடியில் பள்ளி வகுப்புகள்


ADDED : ஆக 22, 2025 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2025 03:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுமலை: எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 8 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் இடிக்கப்பட்டதால் 4 வகுப்புகளைச் சேர்ந்த மாணவிகள் மரத்தடியில் படித்து வருகின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கணேசன்: கடந்த ஆண்டு பழுதடைந்த வகுப்பறைகளை இடித்து அப்புறப்படுத்த உத்தரவு கொடுத்து விட்டனர்.

பள்ளி விடுமுறைக்காலங்களில் அப்புறப்படுத்த கோரியபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆனால பள்ளி துவங்கியபின் இடித்தனர்.

மாற்று ஏற்பாடுகள் செய்து தரவில்லை. இந்நிலையில் எழுமலை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் ஆய்வக பயிற்சி பெற இங்கு வருகின்றனர்.

இதனால் மேலும் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. அரசு விரைவில் கட்டடங்கள் கட்டுவதற்கும், தற்காலிகமாக வகுப்பறை நடத்துவதற்கான வசதியையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us