ADDED : டிச 03, 2025 06:41 AM
மதுரை: மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலை, மீனாட்சிபுரம் கண்மாய் கரைகளில் ஒரு லட்சம் விதைப்பந்துகள் துாவும் விழா நடந்தது.
தாளாளர் அந்தோணிசாமி, முதல்வர் அன்பரசு தொடங்கி வைத்தனர். கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி என்.எஸ்.எஸ். முகாம், பார்வை பவுண்டேஷனின் இளம் மக்கள் இயக்கம் ஏற்பாடுகளை செய்தன. ஒருங்கிணைப்பாளர் அபிராமி, இயக்க நிறுவனர் சோழன் குபேந்திரன் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் விதைப்பந்துகளை துாவினர்.


