ADDED : செப் 20, 2025 04:04 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர்.
விரிவாக்க மற்றும் செயல்பாட்டு முதன்மையர் சிலம்பரசன் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பாண்டி பேசினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வெங்கடேஷ்பாரதி நன்றி கூறினார்.