/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள் குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
குமரி, நெல்லைக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்
ADDED : செப் 20, 2025 05:35 AM
மதுரை: ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கு மதுரை வழியாக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி செப். 22 முதல் அக். 20 வரை திங்கள் தோறும் இரவு 11:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06151), மறுநாள் மதியம் 1:20 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறது. மறுமார்க்கத்தில், செப். 23 முதல் அக். 21 வரை செவ்வாய் தோறும் மதியம் 3:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06152), மறுநாள் காலை 8:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது.
இவ்விரு ரயில்களும் நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்கின்றன. 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 11 'ஸ்லீப்பர்' பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு - திருநெல்வேலி செப். 26 முதல் அக். 26 வரை வெள்ளி, ஞாயிறு தோறும் அதிகாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06154), மதியம் 1:15 மணிக்கு செங்கல்பட்டு செல்கிறது. மறுமார்க்கத்தில், மதியம் 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06153), இரவு 11:55 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது.
இவ்விரு பகல்நேர ரயில்களும் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்துார் வழியாக செல்கின்றன. 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு 'ஏசி' சேர் கார், 12 சேர் கார்கள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன.
இவற்றுக்கான முன்பதிவு இன்று (செப். 20) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.