/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கல்லுாரிக்கான மாநில ஆராய்ச்சி போட்டிகள் கல்லுாரிக்கான மாநில ஆராய்ச்சி போட்டிகள்
கல்லுாரிக்கான மாநில ஆராய்ச்சி போட்டிகள்
கல்லுாரிக்கான மாநில ஆராய்ச்சி போட்டிகள்
கல்லுாரிக்கான மாநில ஆராய்ச்சி போட்டிகள்
ADDED : செப் 25, 2025 03:40 AM
மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரியில், கல்லுாரி மாணவிகளுக்கு இடையேயான மாநில ஆராய்ச்சி போட்டிகள் நடந்தது.
முதல்வர் பாத்திமா மேரி தலைமை வகித்து பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் இளம் தலைமுறை யினர் ஆராய்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்றார். ஆராய்ச்சி புலத்தலைவர் மாலதி வரவேற்றார். பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவிகள் குழு ஆராய்ச்சி குறித்த கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கம் அளித்தது. பேராசிரியர்கள் பழனிவேல்ராஜன், மீனாட்சி, கவுரி பிரியா, ஸ்ரீபாலா, ஷியாமளா அஸ்னெட் மேரி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
நிறைவு விழாவிற்கு செயலாளர் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தார். கருமாத்துார் அருள் ஆனந்தர், திருச்சி துாய வளனார், மதுரை லேடிடோக் கல்லுாரிகள் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றன. உதவி பேராசிரியைகள் சுகந்தனா, சுகன்யா, இணை பேராசிரியை ஆஷா, ஆராய்ச்சி அமைப்பு மாணவிகள் ஜெனீஷா, நேஹா, கிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் பங்கேற்ற னர். ஆராய்ச்சி மேம்பாட்டு குழு, மாணவியர் ஆராய்ச்சி அமைப்பு ஏற்பாடு செய்தது.