ADDED : செப் 20, 2025 04:15 AM

மதுரை: மதுரை குயின்மிரா பள்ளியில் 4வது மாநில டேக்வாண்டோ போட்டி நடந்தது. இதில் மதுரை ரைசிங் சாம்பியன்ஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்று 13 பதக்கங்களை வென்றனர்.
சப் ஜூனியர் பிரிவில் யாழ்வேந்தன், லக்ஷிதா, நந்தித்தா, எப்ரான் தங்கப்பதக்கம் வென்றனர். பிரஜன் வெள்ளியும், ஹரிச்சரண், அபினேஷ், ஹர்தேவ்ராஜன் வெண்கல பதக்கம் வென்றனர். கேடட் பிரிவில் ஜீவிதா, சாதனாஸ்ரீ தங்கப்பதக்கம், லித்திகா, கவின்நரசிம்மன், பி.பிரஜன் வெள்ளிப்பதக்கம், யோகேஷ், தக்ஷின், தர்ஷினி, ஆதிதேவ், ஸ்ரீஹரி, யாத்ரா, ஆண்டிசாமி, எஸ்.ஜீவிதா வெண்கலப்பதக்கம் வென்றனர்.
ஜூனியர் பிரிவில் இசைவாணி, விக்னேஸ்வரன் வெள்ளியும் கவிசந்தோஷ் வெண்கல பதக்கம் வென்றனர். அகாடமி செயலாளர் கவுரிசசங்கர், பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், ராம்ராஜ், மதன் வாழ்த்தினர்.