ADDED : ஜன 14, 2024 03:49 AM

சோழவந்தான், சித்தாலங்குடி கண்ணன் மகன் தினேஷ் 19, கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர். இவரும் அதேபகுதி சிறுவன் தங்கபாண்டியும் 14, நேற்று மாலை சித்தாலங்குடி கண்மாய் அருகே உள்ள தென்னந்தோப்பிற்கு தேங்காய், இளநீர் ஏற்ற சென்ற வேனின் பின்பகுதியில் தொங்கி சென்றனர். அப்போது தாழ்வாக சென்ற மின் ஒயரை பிடித்த தங்கப்பாண்டியை தினேஷ் தடுக்க முயன்றார்.
இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தினேஷ் இறந்தார். தங்கப்பாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.


