ADDED : ஜன 05, 2024 05:23 AM
மதுரை : நம்மாழ்வார் விருதுக்காக விண்ணப்பித்த இயற்கை விவசாயிகளின் வயல்களை கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.
மதுரை கிழக்கு பூலாங்குளம் பூங்குழலி, டி.கல்லுப்பட்டி மோதமகம் அரவிந்தன் வயலில் அங்கக முறைப்படி நெல், மா, கொய்யா நடவுடன் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். மண்புழு உரம், பஞ்சகாவ்யா, மீன் அமிலம் தயாரிக்கின்றனர். இவர்கள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், மாவட்ட தேர்வுக் குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


