ADDED : பிப் 12, 2024 05:19 AM

மதுரை: மதுரையில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பூம்சே, க்யூரூகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் கலந்து கொண்டு 26 தங்கம், 18 வெள்ளி, 9 வெண்கல பதக்கம் வென்று ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மதுரை டேக்வாண்டோ அகடமி தலைமை பயிற்சியாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் சஞ்சீவ், பிரகாஷ் குமார், பிலால், முத்து, புவனேஸ்வரி பாராட்டினர்.