ADDED : அக் 11, 2025 04:22 AM
பேரையூர்: கே.பாப்புநாயக்கன்பட்டி கருப்பசாமி மகன் தேசாமுத்து 27. இவரது சகோதரர் கருப்பசாமி. இவர்களுக்கு அருகருகே வீடு உள்ளது. நிலப்பிரச்னை தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவரும் குடிபோதையில் சண்டையிட்டு அருகில் இருந்த கருப்பன் என்பவரின் வீட்டின் கம்பி வேலி துாண் கற்களை உடைத்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த கருப்பனின் தந்தை அழகர்சாமி 68, வீட்டில் இருந்த ஈட்டியால் தேசாமுத்தை குத்திக் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.


